ETV Bharat / state

திமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்- அதிமுக வேட்பாளர் ராஜவர்மன்

விருதுநகர்: திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் கூறியுள்ளார்.

ராஜவா்மன்
author img

By

Published : Apr 16, 2019, 12:13 PM IST

தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க இன்றே கடைசிநாள் என்பதால், அரசியல் கட்சித்தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீவலப்பேரி தண்ணீரை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். சாத்தூர் பகுதியில் அதிகமாக இருக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற அதிநவீன தீக்காய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.

ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும். அனைவரும் கல்வி பயிலும் வகையில் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். வெம்பக்கோட்டை பகுதியில் அரசு நிலத்தில் அரசு தொழிற்கல்வி அமைக்கப்படும் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து பேசியவர், திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள். அதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார்.

Intro:விருதுநகர்
16-04-19

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத் தேர்தலில் டெப்பாசிட் இழப்பார்கள்- சாத்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேட்டி

Body:வருகிற 18-ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தொடர்ந்து பொதுமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஈடிவி செய்திகளுக்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீவலப்பேரி தண்ணீரை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கப்படும் எனவும் சாத்தூர் பகுதியில் அதிகமாக இருக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற அதிநவீன தீக்காய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்றும் ஏழைக்குழந்தைகள் அனைவரும் கல்வி பயிலும் வகையில் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன் என்றும் சாத்தூர் தொகுதியில் இருக்கக் கூடிய வெம்பக்கோட்டை பகுதியில் அரசு நிலத்தில் அரசு தொழிற்கல்வி அமைக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசியவர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத் தேர்தலில் டெப்பாசிட் இழப்பார்கள் அதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.