ETV Bharat / state

தலித் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! - Aathithamizhar peravai members protest in viruthunagar against caste discrimination

விருதுநகர் : ஊராட்சி மன்ற தலித் தலைவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்திய நபரின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலித் ஊராட்சி மன்றத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

author img

By

Published : Aug 27, 2020, 4:32 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று (ஆகஸ்ட் 27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை மாற்று சமூகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சாதி ரீதியாக பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கடந்த 19ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஊராட்சி மன்ற தலைவரை சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியது மட்டுமின்றி நாற்காலியில் அமர விடாமல் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து சாதி ரீதியாக பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்திவரும் பாலசுப்ரமணியத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.