ETV Bharat / state

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்பு! - chennai news in tamil

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால், 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

921-person-infected-mucormycosis-in-tamilnadu
கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்பு
author img

By

Published : Jun 6, 2021, 3:36 PM IST

சென்னை: கரோனா 2ஆம் அலையில் தொற்று பாதிக்கப்பட்ட சிலர், கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த தற்போது ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஒன்றிய அரசு சார்பில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 2,470 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், இன்றுவரை தமிழ்நாட்டில் 921 பேர் கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகப்பட்சமாக கருப்பு பூஞ்சை பாதிப்புகள் பதிவான மாவட்டங்கள்

மாவட்டம் பாதிப்பு எண்ணிக்கை
சென்னை277
மதுரை 118
சேலம்106
திருச்சி83
செங்கல்பட்டு33
தஞ்சாவூர்24
வேலூர்83

நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஆம்போடெரிசின்-பி மருந்துகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. கூடுதலாக 30,000 குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த அனைவருக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என, சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.