விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியாபட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் ஈஸ்வரன் (9). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஈஸ்வரன் வழக்கம்போல் பள்ளி முடிந்து, வீட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமானப் பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பாண்டியன் நகர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவனின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...