விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுநாராயணபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இன்று வத்திராயிருப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு முத்தம்மாள் என்ற 86 வயது மூதாட்டி கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சா, 600 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்கும் சேவை நிறுத்தம்