ETV Bharat / state

விருதுநகரில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: 40 பேர்  கைது! - people arrested for gang fight

விருதுநகர்: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு 40-க்கும் மேற்பட்டோர் காவல் துறையால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்

விருதுநகரில் 40 பேர் அதிரடியாக கைது
விருதுநகரில் 40 பேர் அதிரடியாக கைது
author img

By

Published : Jan 6, 2020, 11:23 AM IST

Updated : Jan 6, 2020, 1:12 PM IST

விருதுநகரில் பரளச்சி செங்குளத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வாகனங்களில் கோஷமிட்டபடி திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வாகனம் பரளச்சி காவல் நிலையம் முன்பு செல்லும்போது, சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அடுத்தடுத்த வாகனங்களில் வந்த செங்குளம் கிராமத்தினருக்கும் பரளச்சி கிராமத்தினருக்கும் காவல்நிலையம் முன்பே மோதல் ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வேறு வழியின்றி வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டார். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள்.

விருதுநகரில் 40 பேர் அதிரடியாகக் கைது

இதையடுத்து, இரு கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையின் அதிரடிப்படையினர் கலவரத்தில் ஈடுபட்ட இரு கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை வீடு புகுந்து அதிரடியாகக் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், 40 பேர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில் 40 பேரை ஆஜர்படுத்தினர். அதில், 40 பேரையும் 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிறைச்சாலைக்கு இருதரப்பினரையும் தனித்தனி வாகனத்தில் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பவர்கள் பற்றி புகார் கொடுத்தவர் வீட்டின் மீது கல்வீச்சு

Intro:விருதுநகர்
06-01-2020

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மேலும் கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் மருதுபாண்டி உத்தரவு.

Tn_vnr_02_court_judgement_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியில இருதரப்பினரிடையே மோதல் மேலும் கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் மருதுபாண்டி உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி செங்குளத்தை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தங்கள் வாகனங்களில் கோஷமிட்டபடியே திரும்பி கொண்டிருந்தனர் பரளச்சி வழியாக செங்குளத்திற்கு செல்லும் வழியில் பரளச்சி காவல்நிலையம் முன்பு ஒருதரப்பினர் இவர்கள் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது கல் வீசி தாக்கினர் இதனால் அடுத்தடுத்த வாகனங்களில் வந்த செங்குளம் கிராமத்தினருக்கும் பரளச்சி கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. பரளச்சி காவல்நிலையம் முன்பு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேறு வழியின்றி வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இந்நிலையில் இரு கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறை அதிரடிப்படையினர் கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து அருப்புக்கோட்டை மற்றும் ரெட்டியாபட்டி காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 40 பேர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சட்டவிரோத ஆயுதங்களுடன் கூடுதல். பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் கலவரத்தில் ஈடுபட்ட 40 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் நடுவர் மருதுபாண்டி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதித்துறை நடுவர் வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிறைச்சாலைக்கு இருதரப்பினரையும் தனித்தனி வாகனத்தில் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.Conclusion:
Last Updated : Jan 6, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.