விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் புதியராஜ் (14). இவர் இன்று காலை தர்மராஜபுரம் பகுதியில் கட்டட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பி மூலம் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவனின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவும் செய்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மின்சாரம் தாக்கியதன் காரணம் என்ன? என்றும், பாதுகாப்பற்ற முறையில் பணிகள் நடந்ததா? போன்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அறுந்து கிடந்த மின் கம்பி... வாகன ஓட்டிகளை எச்சரித்த பெண்.. வீடியோ வைரல்!