ETV Bharat / state

மாணவியை 6 மாத கர்ப்பமாக்கிய மாணவன்... போக்சோவில் கைது! - virudhunagar crime

விருதுநகர்: 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாத கர்பிணியாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

abuse
author img

By

Published : Sep 11, 2019, 12:21 PM IST

அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி, அதே கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், அருகிலுள்ள தமிழ் பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலி கடுமையாக இருந்ததால், அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்ததில், பதில் கூற மறுத்துள்ளார். இதனால் பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மாணவி 18 வயதிற்குக் கீழ் இருந்த காரணத்தினால் புகாரை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல், மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவருடன் தனக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறியுள்ளார். மாணவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் மாணவியைக் கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதனையடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Intro:விருதுநகர்
10-09-19

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாத கர்பிணி ஆக்கிய அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் போக்சோ சட்டத்தில் கைது.

Tn_vnr_07_pocso_arrest_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாத கர்பிணி ஆக்கிய அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அடைக்கலம் என்ற மாணவன் போக்சோ சட்டத்தில் கைது அருப்புக்கோட்டை அனைத்துமகளிர் காவல்துறையினர் நடவடிக்கை

அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தை சேர்ந்த மாணவி விமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சித்தலகுண்டு கிராமத்தில் அரசு உயர்நிலைபள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் அடைக்கலம் அருகில் உள்ள தமிழ்பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் ஒரே கிராமத்தை சேர்ந்த அடைக்கலத்திற்கும் விமலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர் இந்நிலையில் விமலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது வலி கடுமையாக இருந்ததால் விமலாவின் பெற்றோர் விமலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விமலா 6 மாத கர்பிணியாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த விமலாவின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் மாணவி பதில் கூற மறுத்துள்ளார் இதனால் மாணவி விமலாவின் பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி 18 வயதிற்கு கீழ் இருந்த காரணத்தினால் புகாரை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பினர்
புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல் மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்ற மாணவருடன் தனக்கு பழக்கம் இருந்ததாக கூறியுள்ளார் அடைக்கலத்தை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் மாணவியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.