விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் உதயராஜ். இவர் தொடர் செயின் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல், கூட்டுக்கொள்ளை, அடிதடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே இவரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, உதயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்று உதயராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை கடலூர் சிறையில் அடைத்தனர்.