ETV Bharat / state

பட்டாகத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய இளைஞர் கைது - ஊரடங்கு உத்தரவு

விழுப்புரம்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆரகண்டநல்லூர் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth-arrested-for-cutting-burnt-cake-in-pattagati

author img

By

Published : Apr 16, 2020, 10:27 AM IST

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி வீரப்பாண்டி. இக்கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் மணிகண்டன் (25) என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கரும்பு வெட்டும் பெரிய பட்டா கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும் தான் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதைக் கணொலியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பின்னர் இது குறித்த தகவலறிந்த அரகண்டநல்லூரில் ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமையிலான காவல் துறையினர் மணிகண்டன் (25), அவரது நண்பர்கள் தமிழழகன் (24), பாண்டியன் (22) ஆகியோரைக் கைதுசெய்தனர்.

பட்டாகத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய இளைஞர் கைது

மேலும் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மேலும் நான்கு பேரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும் கைதுசெய்யப்பட்ட மூவர் மீது, பட்டாகத்தியால் கேக் வெட்டியது, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 7 நபர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது என இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளச்சாராய விற்பனை : திருநீர்மலை முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.