ETV Bharat / state

உலக சாதனைப்படைத்த 'மாவொளி திருவிழா'! - 596 பேர் ஒரே நேரத்தில் பனையால் செய்யப்பட்ட நெருப்பு பந்தை மாவொளி சுற்றி உலக சாதனை படைத்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பனை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் 596 பேர், பனையால் செய்யப்பட்ட நெருப்பு பந்தை (மாவொளி) சுற்றி உலக சாதனைப் படைத்தனர்.

உலக சாதனை படைத்த  “மாவொளி திருவிழா”!
உலக சாதனை படைத்த “மாவொளி திருவிழா”!
author img

By

Published : Jun 19, 2022, 6:07 PM IST

விழுப்புரம் : செஞ்சி அருகே பூரிகுடிசை கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் “பனைக்கனவு” திருவிழா நேற்று தொடங்கியது

இதையொட்டி காலையில் பறை இசைத்தும், சிலம்பம் சுற்றியும், தப்பாட்டம் ஆடியும் ஊர்வலமாக சென்ற பனையேறி தொழிலாளர்கள் பனை மரத்திற்கு பூஜைகள் செய்து குலதெய்வ வழிபாடு நடத்தி திருவிழாவைத் தொடங்கினர்.

பனைபொருட்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இவ்விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பனை உணவுப்பொருட்கள் மற்றும் பனை பொருட்களால் செய்யப்பட்ட கூடைகள், பொம்மைகள், அலங்கார மாலை உள்ளிட்ட பலவிதமான கைவினைப் பொருட்கள் கணகாட்சியில் இடம் பெற்றன.

மேலும் பல பனைப்பொருட்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரவு பிரமாண்டமான “மாவொளி தீப்பந்தம் சுற்றல்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே நேரத்தில் 596 பூர்வகுடி இனமக்கள் ஒருசேர இருளில் நின்று மாவொளி நெருப்பு பந்தை சுற்றியபோது விதவிதமான வடிவங்களில் தீப்பொறி சிதறிய நிகழ்வு கார்த்திகை தீபம் போன்று கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது

இந்நிகழ்வை “அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்” நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

உலக சாதனை படைத்த “மாவொளி திருவிழா”!

இதையும் படிங்க : Video: கொட்டும் மழையில் வாழ்வாதாரத்திற்காக பாட்டிலை சேகரித்துக்கொண்டு சென்ற மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.