கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள நச்சியனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை (45). கணவர் இறந்ததையடுத்து சகோதரி வீட்டில் வசித்துவந்த அவர் சில நாள்களாகக் காணவில்லை. இவருக்கு செந்தில் என்ற மகனும் அம்பிகா, ரேவதி என்ற மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், சங்கராபுரத்திலுள்ள முனியப்பன் கோயில் அருகே அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாகப் பகண்டை கூட்டு சாலையைச் சேர்ந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த அங்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தது அஞ்சலைதான் என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, அஞ்சலை கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பலத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு!