ETV Bharat / state

குடும்பத் தகராறில் கணவர் கொலை - family cimes

விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

wife killed husband in family issues
குடும்பத் தகராறில் கணவர் கொலை
author img

By

Published : Jan 13, 2022, 9:18 AM IST

விழுப்புரம்: நாயக்கன் தோப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதியர் சந்தோஷ்-சுரேகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், சந்தோஷ் தன் மனைவி மீது சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.12) சந்தோஷ் குடித்துவிட்டு சுரேகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சுரேகா சந்தோஷை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுக்காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் சந்தோஷின் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பினர். மேலும், சுரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.