விழுப்புரம் மாவட்டம், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நீர்வள பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை தங்கினார். இப்பேரணியில் மழைநீர் சேமிப்பு, நீர்வளம் பாதுகாத்தல், மரக்கன்று நடுவதன் அவசியம், உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஏராளமானோர் பேரணியாக சென்றனர்.
காவல்துறை மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, திருச்சி சாலை வழியாகச் சென்று, நான்குமுனை சந்திப்பில் நிறைவடைந்தது. இந்நிகழச்சியில், ஊராட்சி உதவி இயக்குநர்கள் ஜோதி, ரத்னமாலா உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.