சென்னை ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (24). இவரது நண்பர் வேளச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் (35). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதிகாலை 5.30 மணியளவில் மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞர்களை அந்த வழியாக சென்ற மக்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பின் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மரக்காணம் போலீஸார் இவர்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞர்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை, இதுவே இரு இளைஞர்களின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிக்க: பட்டப்பகலில் கொள்ளை - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்