இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போதுள்ள ஊரடங்கு சூழ்நிலையில் மூத்த குடிமக்களின் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இதர பணிகளை செய்பவர்களுக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும்.
இதற்கு மூத்த குடிமக்களின் பெயர், வயது, ஆதார் எண், அடையாள அட்டை, பராமரிப்பாளர் பெயர் ஆகிய விவரங்களுடன் அரசின் இலவச தொலைபேசி எண் 04146-1077 மற்றும் சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04146-222288 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முழு ஊரடங்கு உத்தரவு - காவல் உயர் அலுவலர்கள் ஆலோசனை