விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பவானி என்கிற இளந்திரை என்ற பெண் மருத்துவர் பணியில் சேர்ந்து இரண்டு வார காலம் ஆகியும் பணிக்கு சரி வர வருவதில்லை எனப் புகார் எழுந்ததையடுத்து மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைக் கண்ட ஆட்சியர், மருத்துவருடன் பணி புரியும் சக செவிலியர்கள் மூலமாக தொலைபேசியில் மருத்துவருக்கு அழைக்கச் சொன்னார். அவர்கள் அழைத்தும் சரி வர ஒத்துழைக்காமல் அலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார், பவானி.
மேலும், ’மருத்துவர் வந்த பிறகுதான் தான் செல்வேன்..!’ என அரை மணி நேரம் ஆட்சியர் மோகன் அமர்ந்திருந்தார். இருப்பினும் மருத்துவர் வருகை தராததால், இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறைக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி!