விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அண்மையில் புகார் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வேளாண் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி வட்டத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் வேளாண்துறை சார்பாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயனாளிகள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று (ஆகஸ்ட் 16) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் விழுப்புரம் அருகேயுள்ள காணை பகுதியில் கிசான் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.