விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் சமூக விரோதிகள் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான காவல் துறையினர் இன்று வீரபாண்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கிருந்த அடர்ந்த புதர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து 220 லிட்டர் கள்ளச்சாராயம், 300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கைபற்றப்பட்டது.
இதையும் படிங்க:ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்!