கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு, மற்றக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதையொட்டி விழுப்புரத்தில் பேருந்து, ரயில், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் கறாராகக் கூறியுள்ளார். இதனால், புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்தளவே உள்ளது. மீதமுள்ளவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு!