ETV Bharat / state

கரோனாவைத் தடுக்க கலர் அட்டைகள்! விழுப்புரத்தில் புது முயற்சி...

author img

By

Published : Apr 11, 2020, 11:30 PM IST

விழுப்புரம்: அத்தியாவசிய பொருட்களை வாங்க வண்ண அட்டைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

viluppuram
viluppuram

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை மேலும் மக்களிடையே பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது; "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 18 பேர் விழுப்புரம் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவை மேலும் மக்களிடையே பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன், ஒருபகுதியாக விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டு பகுதிகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாரம் ஒருமுறை மட்டுமே வெளியே வந்து பொருட்களை வாங்கக் கூடிய வகையில் நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட ஆறு வகையான வண்ண அட்டைகள் அந்தந்த பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இதனைக் கொண்டு வாரத்தில் ஒருநாள் மட்டுமே அந்தப் பகுதி மக்கள் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். இதற்கு விழுப்புரம் நகர மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கிராமப் பகுதிகளில் வேளாண்த் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகரம், பேரூராட்சி மற்றும் அனைத்து கிராமப்புறங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் அனைத்து மேல்நிலை தொட்டிகளும் நிரப்பப்பட்டு வருகிறது. நகரில் உள்ள 46 சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. செஞ்சியில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் செஞ்சி நகரில் சில சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் கரோனாவால் முதல் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.