ETV Bharat / state

'ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்... அப்புறம் பாருங்க... பதக்கங்கள் குவியும்' - இளம் வீரர்களின் குரலுக்கு செவிமடுக்குமா அரசு?

விழுப்புரத்தில் பயிற்சி பெற்று வரும் இளம் ஸ்கேட்டிங் பயிற்சி மாணாக்கர்கள், போதிய அடிப்படை வசதியும், பயிற்சி செய்ய ஸ்கேட்டிங் தளமும் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

'ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்... அப்புறம் பாருங்க... பதக்கங்கள் குவியும்'
Villupuram young skaters request govt to build skating rink
author img

By

Published : Dec 25, 2020, 7:13 PM IST

Updated : Dec 28, 2020, 6:07 PM IST

விழுப்புரம் மாவட்டம், மல்லர் கம்பம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு பெயர் போன மாவட்டம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சியும் மாணாக்கர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று விழுப்புரத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

சரியான பயிற்சி கட்டமைப்பு இல்லாத போதிலும் மாணவர்கள் தங்களின் சக்கர கால்களால், கிடைக்கும் சாலைகளில் எல்லாம் பயிற்சி செய்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரயில் சந்திப்பு நிலைய வளாகத்தில் பயிற்சி பெற்ற இவர்களுக்குத் தற்போது அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட பெருந்திட்ட வளாகம், குழியான சாலைகளில் பயிற்சி செய்து வருகின்றனர்.

சமதளம் இல்லாத சாலைகளில் பயிற்சி மேற்கொள்வதால் மாணவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்து தங்கள் குழந்தைகளைப் பயிற்சி பெறுவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால், 60 பேர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்த நிலையில், தற்போது 10 பேர் மட்டுமே பயிற்சி பெறுகின்றனர். மாவட்ட பெருந்திட்ட வளாகம் நடைபாதைப் பூங்காவில், ஸ்கேட்டிங் பயிற்சிக்கென பிரத்யேக கான்கிரீட் மைதானத்தை உருவாக்க கோரிக்கை வைத்து, கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் போராடியும் எந்தப் பலனும் இல்லை.

ஒருபுறம் குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள், அவர்கள் கைப்பேசி விளையாட்டுக்களைத் தவிர்த்து உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பள்ளி பாடத்திட்டங்களில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் இது போன்று ஆர்வமாய் துடிப்புடன் விளையாட்டில் ஈடுபட்டு வரும் பிஞ்சுகளின் கனவுகளை அரசு சிதைக்கிறது.

'ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்... அப்புறம் பாருங்க... பதக்கங்கள் குவியும்'

மாவட்ட நிர்வாகம் இந்த இளம் வீரர்களுக்கு பயிற்சிக்குரிய இடத்தை ஏற்பாடு செய்யாமல், இதே நிலை நீடிக்குமானால், ஆண்ட்ராய்ட் போனிற்குள் அடைபட்டு போகும் சிறுவர் - சிறுமியர்களின் எண்ணிக்கையை யாரும் தடுத்து விட முடியாது.

இந்த இளம் வீரர்களுக்கு பிரத்யேக ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க...கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!

Last Updated : Dec 28, 2020, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.