ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: டிச.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - sexual harassment case adjourned

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கின் விசாரணையை வரும் டிச.8 ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 4, 2022, 9:19 AM IST

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாகச் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இது தொடா்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வால், முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் முறையே கடந்த நவ.21, 25ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதனைத் தொடர்ந்து. கடந்த நவ.30-ஆம் தேதி அப்போதைய உள்துறைச்செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று நடைபெற்ற விசாரணையின்போதும் எஸ்.கே.பிரபாகா் ஆஜராகவில்லை. மற்ற சாட்சிகளும் ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணையை வருகிற டிச.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.