விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதுடைய பெண். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (07/06/20) மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிந்தார். இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: