ETV Bharat / state

'ஜக்கம்மா சொல்றா.... ஜக்கம்மா சொல்றா...!' - பகுத்தறிவுக் கட்சியின் பலே பரப்புரை - விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து பரப்புரையில் ஈடுபட்டார்.

vilupuram
author img

By

Published : Oct 9, 2019, 1:47 PM IST

Updated : Oct 9, 2019, 2:18 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக முன்னணி நிர்வாகிகள் தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் நா. புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் பகுதியில் திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

ஜக்கம்மா சொல்றா.... ஜக்கம்மா சொல்றா...

இதையும் படிங்க: 'பூம்... பூம்...!' -அமைச்சர் ஜெயக்குமாரின் வைரல் வீடியோ

அப்போது அவர், "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், நல்ல காலம் பொறக்கப் போகுது. தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி வரணும்னா மு.க. ஸ்டாலினால் மட்டும்தான் முடியும்னு ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா..." என குடுகுடுப்பைக்காரர் ஆருடம் சொல்வது போல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இவரது இந்த வித்தியாசமான பரப்புரை முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் திராவிடக் கொள்கைவாதிகள் மத்தியில் முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுத்தறிவுக் கொள்கைகளை தாங்கி நிற்கும் திமுகவில் இப்படி ஒரு பரப்புரை மேற்கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் அணிவகுப்பு!

Intro:விழுப்புரம்: விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி ஆதரவாக அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.Body:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து திமுக, அதிமுக முன்னணி நிர்வாகிகள் தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் பகுதியில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர்.,

'நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது, உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்; நல்ல காலம் பொறக்கப் போகுது.

தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி வரணும்னா மு.க.ஸ்டாலினால் மட்டும்தான் முடியும்னு ஜக்கம்மா சொல்றா...

Conclusion:நாடு நாடா இருக்க...
வீடு வீடா இருக்க... உதயசூரியனுக்கு போட்டு போடுங்க...

பால் விலை ஏற்றத்துக்கு பாடம் கற்பிக்க உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... என்று கூறியபடி வாக்கு சேகரித்தார். இவரது பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Last Updated : Oct 9, 2019, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.