ETV Bharat / state

முழு கொள்ளளவை எட்டியது வீடூர் அணை! - vikkiravandi veedur dam

விழுப்புரம்: வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, மூன்று மதகுகள் வழியாக 1,400 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

veedur dam
veedur dam
author img

By

Published : Dec 2, 2019, 12:30 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை, 1959ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணையானது, 605 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கக்கூடிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக இந்த அணை அதன் முழு உயரமான 32 அடியை எட்டியது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், நள்ளிரவு 12.50 மணி அளவில் மூன்று மதகுகள் வழியாக 200 கனஅடி வீதம் 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு மூன்று மதகுகளிலும் 1,200 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு 1,200 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் அதனை முழுவதுமாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வெளியேற்றத்தால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 3,200 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வீடூர் அணை - விழுப்புரம்

மேலும், அணை எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்து வருவதால் வீடூர் அணை விழா கோலம் பூண்டுள்ளது.

இதையும் படிங்க: 21 நாள்களாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

Intro:விழுப்புரம்: வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இன்று 3 மதகுகள் வழியாக ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
Body:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளது. 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையானது 32 அடி கொள்ளளவு கொண்டது.

அதாவது 605 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கக்கூடிய அளவில் கட்டப்பட்டுள்ள அந்த அணையானது, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நள்ளிரவு 12 .50 மணி அளவில் மூன்று மதகுகள் வழியாக 200 கனஅடி வீதம் 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 400 கனஅடி வீதம் மூன்று மாதங்கள் வழியாக ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

அணைக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அவற்றை அப்படியே வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வின்போது உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 200 ஏக்கர் பாசன வசதி பெற கூடும் எனவும், இதனால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அணை முழுவதும் நிரம்பியுள்ளதால் எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
Conclusion:இதனை காண மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் குழந்தை என குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்து வருவதால் வீடூர் அணை விழா் கோலம் பூண்டுள்ளது. தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

(இந்த செய்திக்கான வீடியோ மெயிலில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.