விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று (ஆக.1) விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவரின் அனுபவம்!