உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் "கரோனா வைரஸ்" தொற்று தமிழ்நாட்டிலும் அதன் தாக்கத்தை அதிகப்படியாக ஏற்படுத்தியுள்ளது. இந்த கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், அதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களை இரவு, பகல் பாராமல் உழைக்கும் காவலர்களின் உடல் நலன்களை கருத்தில்கொண்டு, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள 30 காவல் நிலையங்கள், நான்கு போக்குவரத்து காவல் நிலையங்கள், நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மற்றும் நான்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு என மொத்தம் 42 காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் தேவையான முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.