விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). சித்த மருத்துவரான இவர் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (ஜூலை29) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அவரது உடல் அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் விழுப்புரத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு சித்த மருத்துவர் உயிரிழப்பு - VILLUPURAM Siddha doctor dead due to covid 19
விழுப்புரம்: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சித்த மருத்துவர் உயிரிழந்தார்.