விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று (செப். 25) விழுப்புரம் நாராயணன் நகரில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவைகளை எடுத்துவந்த கே.கே. நகரைச் சேர்ந்த விஜயன், மணி ஆகிய இருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அவர்களிடமிருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் விழுப்புரம் ராஜேஸ்வரி நகரில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரையும், செஞ்சியைச் சேர்ந்த சையது மீரான் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கோவையில் 600 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநிலத்தவர் 3 பேர் கைது!