கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவோர், கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தவிர, வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், பொது மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருசக்கர வாகனங்களில் சுற்றிய இளைஞர்களை போக்குவரத்து காவல் துறையினர் பிடித்து தவளை ஓட்டம் போட வைத்தனர்.
இதேபோல் விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து ஊரடங்கு உத்தரவு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளைப் பிடிக்க வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நூதன தண்டனை வழங்கினார்.
இதையும் படிங்க...அழுகும் பழங்கள்! - வேதனையில் விவசாயிகள்