தமிழ்நாட்டில் முதல்முறையாக தனது தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்களின் கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் புதிய வடிவிலான ஆண்ட்ராய்டு செயலியை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் உருவாக்கியுள்ளார்.
டாக்டர். ரவிக்குமார் எம்.பி. (Dr. Ravikumar MP) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும் விதமாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளைப் பதிவிடுவதுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 26) விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் நிர்வாகி கார்த்திகைச்செல்வன் கலந்துகொண்டு செயலியை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி, விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் எடுத்துள்ள இந்த புதிய முயற்சியை அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்க: உணவு சார் கைபேசி செயலி - தொடங்கிவைத்த அமைச்சர்கள்!