விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் விஜயகுமார், தந்தையை இருச்சக்கர வாகனத்தில் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிகிச்சை முடிந்து மரக்கணம் - திண்டிவனம் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் மாசிலாமணி மற்றும் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழ்ந்தனர். தகவல் அறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: தீபாவளி சிறப்பு பேருந்து வசதி - வெளியூர் பயணிகள் உற்சாகம்!