தமிழ்நாட்டில் விடுபட்டு ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 6) முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பமானது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் வாக்குப்பதிவு மந்தமான நிலையிலேயே இருந்துவந்த நிலையில், தற்போது வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவுசெய்து-வருகின்றனர்.
அதைத் தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும்விதமாக சாய் தளங்கள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் உள்ளன.
முகையூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், வானூர், செஞ்சி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறகின்றது. சுமார் 762 மையங்களில் 1569 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றுவருகிறது.
இதில் 296 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனவும் 62 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிக்காக மூன்று காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், 11 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 121 காவல் வாகன ரோந்துப் படை, 18 பறக்கும் படை உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்’ - முதலமைச்சர்