விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று (ஏப். 17) ஆட்சியர் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு சார்பில், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா இன்றும் (ஏப். 17), நாளையும் (ஏப். 18) நடைபெறுகிறது.
இந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மறுதினம் (ஏப். 19) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூவாகம் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக மத்திய, மாநில அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் அரங்குகளும் அமைக்கப்பட்டு, திருநங்கையர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.
அதேபோல, சித்திரை திருவிழா முடிவுற்றவுடன் மகளிர் திட்டத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்மூலம், திருநங்கைகளின் ஒவ்வொருவரின் கல்வி திறனுக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: நீ துரத்தினால் நான் என்ன சும்மாவா இருப்பேன்; வன அலுவலரைத் துரத்திய காட்டு யானை!