ETV Bharat / state

ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!

அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு
author img

By

Published : Feb 25, 2023, 3:09 PM IST

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரையும் மூன்று நாட்கள் சிபிசிஐடி காவல் விசாரணைக்கு அனுமதித்துள்ள நீதிமன்றம், பிப்ரவரி 28-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போன 3 பேர் குறித்து தகவல் தெரிவிந்தவர்கள் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என சேலம் மாநகர குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர்(பொறுப்பு விழுப்புரம் மாவட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வசித்து வந்த முதியவர் ஜபருல்லா (70) என்பவர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி, விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் இங்கிருந்து பெங்களூரு பகுதியில் உள்ள 'ஹோம் ஆப் ஹோப்' காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதே போன்று திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அடுத்த சங்கரன்கோவிலில் வசித்து வந்த சிவசங்கரன் மனைவி லட்சுமி அம்மாள் (80) (பார்வை குறைபாடு உடையவர்), இவரது மகன் முத்துவிநாயகம் (48) ஆகிய இருவரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல், இவர்கள் இருவரும் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மூவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன நபர்களைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் (94981 69000), சப் இன்ஸ்பெக்டர் (94981 44205 ) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விழுப்புரத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் பெங்களூரு சென்றனர். அங்கு, தொட்டக்குப்பியில் உள்ள ஜூபின் பேபியின் நண்பரான ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து கொண்டு வந்து விடப்பட்டவர்களில் தற்போது எத்தனை பேர் உள்ளனர். இதில் 11 பேர் எப்படி தப்பிச்சென்றனர் என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும், அதுகுறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியும் விசாரணை செய்தனர்.

இதையும் படிங்க: TNPSC Group 2 Update: குரூப்-2 தேர்வில் விடைத்தாள் குளறுபடி; தேர்வு நேரத்தில் மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.