விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தில் வசித்துவரும் விவசாயி அண்ணாமலை (38). இவர் இன்று தனது மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக தனது சகோதரி ஜோதி என்பவரது வீட்டில் தமது இருமகள்களான அக்ஷயா(7) மற்றும் ரக்ஷிதா(6) ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜோதியின் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் அக்ஷாவும் ரக்ஷிதாவும் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் நெடுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஜோதியின் கணவர் ஐய்யப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, இருவரும் காணாத நிலையில் அவர்களது ஆடைகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த ஐய்யப்பன் குட்டையில் இறங்கி தேடிய போது இருவரும் சடலமாக இருந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருவெண்ணெய் நல்லூர் காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மைதானத்தில் மைக்கேல் ஜாக்சனாக மாறிய ஆஸி. வீரர் - வைரல் புகைப்படம்