ETV Bharat / state

வன்னியர்களையும், தலித்துகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார் ராமதாஸ்..!' - வேல்முருகன் சாடல்

விழுப்புரம்: வன்னியர்களையும், தலித்துகளையும் மோதவிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வேடிக்கை பார்ப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேல்முருகன் பரப்புரை
author img

By

Published : Apr 8, 2019, 10:14 AM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரவிக்குமாரை ஆதரித்து நேற்று விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய வேல்முருகன், "வன்னியர்களுக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்கவில்லை என்று சொல்ல ராமதாஸ் தயாரா?. ராமதாஸ் செய்த குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நேற்றுவரை டயர் நக்கிகளாக தெரிந்த ஓபிஎஸ்- ஈபிஎஸ் இன்று பெட்டி வாங்கியவுடன் நல்லவர்களாக தெரிகிறார்களா?. ஏரி, குளம், குட்டைகளுக்கு தெர்மாகோல் போட்ட ஒரே அரசு இந்த அடிமை எடப்பாடி அரசுதான்.

வன்னியர்களையும், தலித்துகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார் ராமதாஸ். இனி இந்த மண்ணில் சாதியப் படுகொலைகள் நடக்கக்கூடாது. என்னை விமர்சனம் செய்யும் ராமதாஸ், நான் விமர்சனம் செய்தால் தாங்கி கொள்வாரா?. அன்புமணி தாங்குவாரா? இட ஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்த குடும்பங்களை வாழ வைத்தாரா ராமதாஸ்? அவர்கள் யார் என்றாவது அன்புமணிக்கு தெரியுமா?

வேல்முருகன் பரப்புரை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார். 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான், வன்னியர் உள்ளிட்ட 108 பிரிவினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது போல், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமாரின் உயிருக்கு ஆர்.எஸ்.எஸ் மதவாத கும்பல்கள் குறிவைக்கலாம்' என்று தெரிவித்தார்.

நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசிக துணை பொதுச் செயலாளர் ஆளுர்ஷா நவாஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Intro:விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களையும், தலித்துகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்

Body:நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் துரை.ரவிக்குமார் ஆதரித்து இன்று விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது பேசிய வேல்முருகன்., 'வன்னியர்களுக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்கவில்லை என்று சொல்ல ராமதாஸ் தயாரா? ராமதாஸ் செய்த குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

நேற்றுவரை டயர் நக்கிகளாக தெரிந்த ஓபிஎஸ்- இபிஎஸ் இன்று பெட்டி வாங்கியவுடன் நல்லவர்களாக தெரிகிறார்களா? ஏரி, குளம், குட்டைகளுக்கு தெர்மாகோல் போட்ட ஒரே அரசு இந்த அடிமை எடப்பாடி அரசு.

வன்னியர்களையும், தலித்துகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்கிறார் ராமதாஸ். இனி இந்த மண்ணில் சாதிய படுகொலைகள் நடக்கக்கூடாது.

என்னை விமர்சனம் செய்யும் ராமதாஸ், நான் விமர்சனம் செய்தால் தாங்கி கொல்வாரா? அன்புமணி தாங்குவாரா? இட ஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்த குடும்பங்களை வாழ வைத்தாரா ராமதாஸ்? அவர்கள் யார் என்றாவது அன்புமணிக்கு தெரியுமா?

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். 1989 ஆண்டு திமுக ஆட்சியில் தான், வன்னியர் உள்ளிட்ட 108 பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது போல், விசிக தலைவர் திருமா, துரை.ரவிக்குமாரின் உயிருக்கு ஆர்எஸ்எஸ் மதவாத கும்பல்கள் குறிவைக்கலாம்' என்றார்.

Conclusion:இந்த நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர்ஷா நவாஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.