ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் - கனிமொழி - திமுக ஆட்சிக்கு வந்தவுடன்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் காலி அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என கனிமொழி உறுதியளித்துள்ளார்.

kanimozhi
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் - கனிமொழி உறுதிமொழி
author img

By

Published : Mar 26, 2021, 9:34 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்துள்ள கோலியனூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி, "10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதே தவிர எந்தப் பணியும் அங்கு நடைபெறவில்லை. முதலமைச்சர் பழனிசாமி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அடிக்கல் நாயகன். பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விழுப்புரத்தில் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகத் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்பதால் வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 23 லட்சம் தமிழ் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துவருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - கனிமொழி உறுதிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முதலீடுகள் கொண்டுவரப்பட்டு 75 விழுக்காடுப் பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். மூன்று லட்சத்து 50 ஆயிரம் காலி அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை குறை சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்த முடிவையும் முதலமைச்சர் எடுப்பதில்லை. மோடி, அமித் ஷா சொல்வதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.