விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் விஷ்ணுபிரியா தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு (செப். 20) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கோட்டக்குப்பம் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஆண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரைக் கைதுசெய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த கள்ளச்சாராயம், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி பேட்டரிக்குள் கஞ்சா கடத்தல்!