விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கரசனூர் சித்தேரிக்கரை பகுதியில் பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர். இங்கு கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதனால், பழங்குடி மக்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர்களுக்கு சேந்தமங்கலம் கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு அவர்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் பழங்குடி மக்கள் அந்த இடத்திற்குச் செல்ல மறுப்புத் தெரிவித்து, மாற்று இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.
இருந்தபோதிலும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் கண்டன ஊர்வலம்