தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களான அரிசி, காய்கறிகளை வழங்கினார்.
தொடர்ந்து, திருநங்கைகளுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும் பொதுமக்களிடையே வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்க! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!