விழுப்புரம் மாவட்டம், வண்டிமேடு, லால்கான் குட்டை உள்ளிட்டப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு, அமைச்சருடன் இருந்த நகர பாசறை செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணன் என்பவர் தலா ரூ.100 பணத்தை அன்பளிப்பாக கொடுத்தார். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் உதயகுமாருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு பணம்? காணொலி வைரல்