விழுப்புரத்தில் நடைபெற்ற தமாகா நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழக அரசை வாழ்த்துகிறேன். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்த முயற்சித்தும், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பலத்துக்கு ஏற்றவாறு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம். தமிழக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சசிகலாவின் வருகை தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சரே தெளிவாக கூறிவிட்டார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் " என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீளுமா காங்கிரஸ் - ஓர் அலசல்