விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். நேற்று இவரது வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் புகுந்து திருட முயன்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் செங்கல்பட்டு மாவட்ட மேற்கு செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கல்பனா(38) என்றும், பெருங்களத்தூரைச் சேர்ந்த லட்சுமி(39) என்பதும், இவர்கள் மீது ஏற்கெனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: தன்யா ரவிச்சந்திரன் அசத்தல் புகைப்படங்கள்