ETV Bharat / state

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை - பாலியல் வழக்கில் உத்தரவு - பாலியல் தொல்லை வழக்கு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடந்தையாக செயல்பட்டதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஸ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு

author img

By

Published : Jun 16, 2023, 10:56 AM IST

Updated : Jun 16, 2023, 5:20 PM IST

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை பாலியல் வழக்கில் உத்தரவு

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பாதுகாப்புப் பணிக்கு சென்று இருந்த பெண் ஐபிஎஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து அரசு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பளித்து உள்ளார்.

அதில் இவ்வழக்கின் முதல் குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார் மேலும் இரண்டாவது குற்றவாளியான செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் அவர்களுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டிஜிபி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிறப்பு டிஜிபி மீதான புகாரை கொடுக்க சென்ற பெண் எஸ்பிஐ தடுத்து நிறுத்தியதாகவும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக ராஜேஸ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின் படி பெண் எஸ்பி அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று நிறைவு அடைந்தது.

இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியது. அதுபோல் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்து உள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவு அடைந்தது. அது போல் முன்னாள் சிறப்பு டிஜிபி செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப் பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு ராஜேஸ்தாஸ் தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். காவல் துறையில் உயர் பதவியில் இருந்த முன்னாள் டிஜிபி மீது பெண் எஸ்பி அதிகாரி பாலியல் புகார் அளித்த வழக்கு கடந்த 2 வருடமாக நடந்து வந்த நிலையில் இன்றைய தினம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், முன்னாள் எஸ்.பி.கண்ணனும் குற்றவாளி எனவும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் அவர்களுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்? - ஆளுநரின் மறுப்புக்கு அமைச்சர் பொன்முடி பதில்!

Last Updated : Jun 16, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.