விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானார் எனதிரிமங்கலம் தடுப்பணை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக கட்டப்பட்டது. இதனையடுத்து இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பயனடைவார்கள் என அறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு எனதிரிமங்கலம் பகுதியில் தடுப்பணை கதவுகள் மற்றும் கரைகள் முழுவதுமாக உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இந்நிலையில் சில நாள்களாகப் பெய்த மழை காரணமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தளவானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணை மற்றும் சுற்றுச் சுவர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் முழுவதுமாக தற்போது வரை வெளியில் வருகின்றது. இந்த நிலையில் நேற்றிரவு (நவ.12) தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரை முழுவதுமாக உடைந்து தண்ணீர் அதிகளவு வெளியேறி வருகிறது.
மேலும் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருவதால், விளை நிலங்களுக்குள் போகும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் . இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் கரைகளைப் பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தற்போதுவரை தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க:அடுத்த 2 நாள்களுக்கு குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கனமழை!