விழுப்புரம் அருகேயுள்ள பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் சேகர். ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான இவர் மனைவியுடன் சென்னையிலுள்ள மகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.இதனை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை கொள்ளையடித்தனர்.
இன்று காலையில் அக்கம்பக்கத்தினர் சேகர் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருபதை கண்டு அதிர்ச்சி அடைந்து, சேகருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் கைப்பேசி மூலம் காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசராணை மேற்கொண்டனர்.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டிலும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடிக்க முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.