ETV Bharat / state

வக்கிரகாளியம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம் - விழுப்புரத்தில் திருவக்கரை வக்கிரகாளியம்மனை தரிசித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

விழுப்புரம்: திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த தமிழிசை
சாமி தரிசனம் செய்த தமிழிசை
author img

By

Published : Feb 27, 2020, 10:02 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அருகிலுள்ள விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயில், மயிலம் முருகன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார்.

திருவக்கரை கோயிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “திருவக்கரை வக்கிரகாளியம்மனையும், சந்திரமொளலீஸ்வரரையும் தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தமிழ்நாட்டில் இயக்க தலைவராக இருந்த சமயத்தில் இந்தப் பகுதிக்கு வரும்போது அம்மனை தரிசிப்பது வழக்கம்.

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை

தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக இந்தப் பகுதிக்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆயில் கூடினால் ஆயுளுக்கு ஆபத்து - தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.