ETV Bharat / state

'தமிழ்நாடு என்பதே சரியான வார்த்தை' - ஆளுநரின் பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி

'சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பெயர் தமிழ்நாடு', என ஆளுநரின் பதிவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் கூறியுள்ளார்.

ஆளுநரின் பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Jan 6, 2023, 4:30 PM IST

ஆளுநரின் பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றியம் கஞ்சனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களைச் சந்த்திதார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி 'தமிழகம்' என்பதே சிறந்த வார்த்தை 'தமிழ்நாடு' என்கிற வார்த்தை பிரிவினை வாதத்தை தூண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,

"தமிழ்நாடு என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு நல்ல பெயர். அது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது நடந்த விவாதத்தில், ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டு கருத்துகள் முன்மொழியப்பட்டன. அப்போது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பொதுவான முறையில் 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்(Union of States)' என்று கொண்டு வந்தார்.

யூனியன் என்றால் ஒருங்கிணைந்த அல்லது ஒன்றியம் என்று பொருள். ஸ்டேட்ஸ், என்றால் மாநிலம் என்று பொருள். இதன் அடிப்படையிலே தமிழ்நாடு என்ற பெயர் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்படி செயல்படுகின்ற நமது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதில் எந்த ஒரு வேறுபட்ட கருத்தும் இல்லை.

ஆளுநருக்கு வரலாறு எந்த அளவிற்கு தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கடந்த காலம் முதலே பல்வேறு நிகழ்வுகளில் இவ்வாறாக பேசிக் கொண்டு வருகிறார். தமிழ்நாடு என்பது சரியான வார்த்தை, இதனை நான் இத்தருணத்தில் அவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மகாராஷ்டிரா மாநிலம் என்பதில் ராஷ்டிரா என்கிற வார்த்தை இந்தியில் மாநிலம் என்றே பொருள். இந்தியாவின் தேசிய கீதத்தில் திராவிடம் என்கிற வார்த்தை வருகிறது. ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவரும் நலத்திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை நீங்கள் ஒரு பெயரளவு நிர்வாகி என்கிற முறையில், அதனை அங்கீகரிக்க வேண்டும் என இத்தருணத்தில் நான் கோரிக்கை வைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் - ஆளுநரால் வெடித்த சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.